நடிகர் ரஜினிகாந்த இன்று காலை திடீர் என சென்னையில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக பெங்களுரு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து அவர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது சமீபத்தில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பின் போது அண்ணாத்த படத்தின் சூட்டிங் இன்னும் 40 நாட்கள் பாக்கி இருக்கிறது என்றும் அதை முடித்து விட்டு அரசியலில் முழுமூச்சாக இறங்குவேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.