அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிற வரை இத்தகைய செய்திகள் வெளியாவதை தடுக்க முடியாது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கிற கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்பதாக மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களே தகவல் தருகிறார்கள்.டிஎம்கே,ஏடிஎம்கே வரிசையில் எம்.எஸ்.கே !
அதுமட்டுமல்ல,பாபாபோடு சக்கைபோடு.!வின் முத்திரையை தேர்தல் சின்னமாக கொடுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் சொல்லிவிட்டதாம் .
இது காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை பாதிக்கக்கூடும் என்பதால் ஆட்டோ ரிக்ஸாவை ஒதுக்குவதாக சொல்லியிருக்கிறார்கள் .இதுவும் ஒருவகையில் உற்சாகத்தை தரக்கூடியதுதான். “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் “என்கிற பாட்டு மூலம் பட்டையை கிளப்பிவிடலாம் என்கிறார்கள் . இந்த பாட்டு ஏற்கனவே தமிழகம் முழுவதும் பேமஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது.