மணமகன்தேவை!- பிரியா பவானிசங்கர் ‘திடீர்’ டுவிட்!!
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து, ’மேயாதமான்’ , ’மாபியா’, ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானிசங்கர். தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’,ஹரிஸ் கல்யாணுடன் ’ஓ மணப்பெண்ணே’ … உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ப்ரியா பவானிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.பிரியா பவானிசங்கரின் இப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது எந்த படத்துக்கு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.(தெளிவாத் தான்யா இருக்காய்ங்க)
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர்,நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து தன்னுடைய கல்லூரி கால காதலர் ராஜவேல் என்பவரை கழற்றி விட்டுவிட்டு, ஹரிஸ் கல்யானை காதலித்து வருவதாக வதந்தியும் சமூக வலைதளங்களில் பரவியது .
ஆனால் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரமோஷன் என்பது பின்னர் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
‘Prospective grooms are welcome’ pose 😛
That default matrimony picture by @kiransaphoto 🤗 pic.twitter.com/ZkKJwo25Rz— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 22, 2020