தன்னுடைய உடல் நலம் குறித்து கவலைப்பட்ட ரஜினிகாந்த் “அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை” என தெளிவாக தெரிவித்திருந்தாலும் சிலர் விடாப்பிடியாக அவரை வற்புறுத்திவருகிறார்கள்.
“அரசியல் கட்சி ஆரம்பித்தேயாகவேண்டும்!”
அவரது உடல் நலம் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. இத்தகைய மனப்பான்மை உள்ள பலர் வருகிற 10 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநோன்பு இருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதை அறிந்த ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் வழியாக அவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக தெரிகிறது.
“தலைவரின் உடல்நலத்தில் உண்மையான அக்கறை இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள். உடனடியாக உண்ணாநோன்பு முயற்சிகளை கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.