தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா.
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தின் மூலம்ஆனந்திஎன்ற பெயரில், கதாநாயகியாக அறிமுகமானார் .
இதன் காரணமாக ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து ‘சண்டி வீரன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘ஏஞ்சல்’, ‘இராவணக் கோட்டம்’ டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டிஉள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் கயல் ஆனந் திக்கும் மூடர்கூடம் இயக்குனர் நவீனின் நெருங்கிய உறவினருமான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் நேற்று இரவு 8 மணிக்கு தெலுங்கானா வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் திருமணம்இந்து முறைப்படி நடந்தது .இது காதல் திருமணம்,
கொரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால் ஆனந்திக்கு நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது .
இதையடுத்து படத்தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மணமகன் சாக்ரடீஸ் இயக்குனர் நவீனின் மைத்துனர் ஆவார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அக்கினிசிறகுகள்,அலாவுதீனின் அற்புதகேமரா ஆகிய படங்களில் இணை இணயக்குநராக பணியாற்றி வருகிறார் என்பதும் மேலும் மூடர் கூடம் நடிகை சிந்துவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு கயல் ஆனந்தி தொடர்ந்து நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பார் என்கிறார்கள்.