சமீபத்தில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்து பேசியுள்ளார். சத்குருவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள சமந்தா சத்குருவுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளதாவது,: ஆன்மீக செயல்முறையின் முழு முயற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து, ஒரு மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். உங்கள் அறியாமையின் விளைவாக, நீங்கள் உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே நீக்கி கொண்டு, ஒரு நல்ல படைப்பாளியாக நம்மை உருவாக்கி கொண்டு வாழ்வது தான் ஆன்மீகத்தின் நோக்கம். இதுவொரு முற்றிலும் ஆனந்தமான மற்றும் எல்லையற்ற பொறுப்பு. வெறும் அறிவு மட்டும் ஒரு சாதனை அல்ல. உங்கள் புலன்கள் அனைத்தும் ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன, ஆனால் நீங்கள் ஒருபோதும் உண்மையான வெளிப்புறத்தை அனுபவித்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவொளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்’ என்று கூறியுள்ளார்.சமந்தாவின் கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலையுடன் தோன்றும் சமந்தா கிட்டத்தட்ட ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டது போல் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.