’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இந்நிலையில் எடர்நிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் எடர்நிட்டி ஸ்டார் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், அஜய் பிரதீப்பின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில்,அனைத்து முன்னணி நடிகர்கள் பங்கேற்க ஒரே நேரத்தில் உருவாகிறது. ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’.
125 மணி நேரம் ஓடும் முழுநீளத் திரைப்படமாகவே எடுக்கப்படவிருக்கிறது. ஆனால் அதை அப்படியே திரைப்படமாக ரிலீஸ் செய்வது சாத்தியமில்லை என்பதால், அதை வெப் ஃபிலிம் சீரிஸாகக் குறுக்கி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.திரை
இவரது தாயார் நடிகை ஓமனா எம்ஜிஆருடன் ‘ஜெனோவா’ என்ற மலையாளப் படத்தில் ஜோடியாக நடித்தவர். இப்படத்தின் முழுத் திரைக்கதையும், வசனம், லொக்கேஷன், ஷாட் டிவிஷன் உள்பட அனைத்துத் தொழில்நுட்பக் கூறுகள் புத்தக வடிவில் பதிவாக்கப்பட்டிருக்கிறது.இசைஞா
ஆகஸ்ட் 18ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 (ஏப்.14 2022) முதல் பிரபல ஓடிடி தளத்தில் 9 சீசனாக வெப் ஃபிலிம் சீரிஸாக முதல் எபிசோட் ஒளிபரப்பாகவிருக்கிறது.