தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’!
அசுரன்,கர்ணன் படங்களைத்தொடர்ந்து, தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய பட த்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்பட த்தை தொடர்ந்து,’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் உருவாக உள்ளது .
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கி வந்த கர்ணன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘எஸ்12’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நானே வருவேன் என வித்தியாசமான இந்த படத்தின் தலைப்பை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.