விமல் என்றொரு நடிகர் இருந்தார் அல்லவா…மறந்திருக்கமாட்டீர்கள் .
இவருக்கு சொந்த ஊர் பண்ணாங்கொம்பு .திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து இருக்கிறது.
இவரது வீட்டுக்கு அருகில் ஊருக்கு பொதுவான மந்தை இருக்கிறது. இந்த மந்தை திடலில் விளக்குத் தூண் அமைத்து பூஜை செய்து வந்தார்கள் அந்த கிராமத்து மக்கள்.
சமீபத்தில்தான் இரண்டடி உயரத்துக்கு மேடை கட்டப்பட்டது.
அந்த மேடையை சிலர் ஜேசிபி எந்திரம் கொண்டு வந்து இடித்து தரை மட்டமாக்கிவிட்டார்கள்.
“எப்படி இடிக்கலாம் ?”என்று ஊர் மக்கள் கேட்க ,”அப்படித்தான் இடிப்போம்”என்று சிலர் சண்டைக்கு வர பிரச்னை ஆகி இருக்கிறது.
இடித்தவர்கள் பக்கமாக நடிகர் விமலும் இருந்து விவாதம் பண்ணியிருக்கிறார்.
இது தொடர்பாக பூசாரி செல்வம் என்பவர் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்து விட்டார்.
டி .எஸ்.பி.பிருந்தா விசாரணை நடத்தி வருகிறார்.