தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) 2021 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் ஆர்கே செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச் செயலாளராகவும், என் சுவாமிநாதன் பொருளாளராகவும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகியுளளனர்.
இவர்களுடன் துணை தலைவர்களாக தினா, ஜே .ஸ்ரீதர், எஸ் பி செந்தில்குமார், பி தினேஷ் குமார், தவசி ராஜ் ஆகியோரும் இணைச் செயலாளர்களாக சபரீசன், சீனிவாச மூர்த்தி, புருஷோத்தமன், ஜி செந்தில்குமார், கே ஸ்ரீபிரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். வி. உதயகுமார், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜய முரளி ஆகியோர் வாழ்த்தினர். புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா விரைவில் நடக்க உள்ளது