தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம், ‘பேய்கள் ஜாக்கிரதை’. ஹாரார் காமெடி படமான இதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் பிரபல இந்தி நடிகையான கெஹனா வசிஸ்த். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தி டிவி தொடர்களிலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் தற்போது சில வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.மிஸ் ஆசிய பிகினி என்ற பட்டத்தையும் வென்றுள்ள இவர் தனி ஆன்லைன் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி உள்ளார். இச் சேனலுக்காக மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் ஆபாச படங்களை தயாரித்து வருவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அதிரடியாக அந்த பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து இச் சம்பவத்தில் தொடர்புடைய , நடிகை கெஹனா வசிஸ்த்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த இரண்டு நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், ஒரு டிசைனர் ஆகியோரையும் கைது செய்தனர்.அங்கிருந்த இளம் பெண் ஒருவரும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டார். இச் சம்பவம் குறித்து நடிகை கெஹனாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகை கெஹனா வசிஸ்த்இதுவரை ’87’ ஆபாச விடியோக்களை தயாரித்து தனது ஆன்லைன் சேனலில் பதிவேற்றியுள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவத்தில் இன்னும் சில நடிகைகள் கைது செய்யப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். நடிகை கெஹனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். ஆபாசப் பட விவகாரத்தில் பிரபல நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது இந்திப்படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.