மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி!
“100” திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. அதர்வா முரளி கதா நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இணையவழி குற்றங்கள் ( Dark Web) தான் இப்படத்தின் பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது.
Related Posts
இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான், இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரூபன் செய்ய, கிருஷ்ணன் வெங்கட் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்கிறார்