தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்காஷெட்டி, பாகுபலி நிசப்தம் படங்களுக்கு பின் பெரும்பாலான பட வாய்ப்புகளை தவிர்த்து,தேர்ந்தெடுத்த சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் இந்நிலையில் நடிகை அனுஷ்கா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது என பேட்டி கூறியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அனுஷ்கா பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது,”சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்லி வருகிறார்கள். பட வாய்ப்புக்காக திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.சினிமாத்துறை கவர்ச்சி மிகுந்தது. அதனால் இங்கு நடப்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இருக்கிறது.
நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதையும் நான் சந்திக்கும் அளவில் நடந்து விடவில்லை. நான் நேர்மையான வழியில் இருக்க கூடியவள் என்பது மற்றவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் அந்த மாதிரி தொந்தரவுகள் எதுவும் எனக்கு ஏற்படவில்லை .ஆனாலும் சில கஷ்டங்கள் இருந்தன. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு.
தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை கொடுக்கவும் தொடங்கி விடுவார்கள்.இடையில் பட வாய்ப்புகளை தவிர்த்தது எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தான் என்றும் கூறியுள்ளார்.