“ஒரே ஒரு ஆக்சன் சீன்தான் பெண்டிங் .அது முடிஞ்சிருச்சுன்னா வலிமை ஷூட்டிங் நிறைவு அடைஞ்சிடும்” என்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர். பிப்ரவரி 15 -ல் பூசணிக்காய் உடைத்துவிடுவார்கள்.
தல அஜித் ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதலான செய்தி.
எப்போது அப்டேட் என்று டிவிட்டரில் அதிகமாக கேட்டவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும்.
இது மட்டுமல்ல ,மே முதல் வாரம் அல்லது ஏப்ரலில் வலிமை தியேட்டருக்கு வந்துவிடும் என்கிற தித்திப்பான செய்தியையும் சொல்லியிருக்கிறார்.
அந்த ஆக்சன் சீன் வெளிநாட்டில் எடுக்கப்படும் .விரைவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை ஆரம்பிக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார்.
எச்.வினோத் இயக்கம், நீரவ்ஷா ஒளிப்பதிவு , யுவன் இசை .அண்மையில்தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய படத்தின் தொடக்கப்பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.