Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

குட்டி ஸ்டோரி ( விமர்சனம்.)

admin by admin
February 13, 2021
in Reviews
435 4
0
608
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பாளர் :டாக்டர் ஐசரி .கே.கணேஷ் ,வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்.

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

கவுதம் வாசுதேவ மேனன் ,ஏ.எல் .விஜய் ,வெங்கட் பிரபு ,நலன் குமாரசாமி ஆகியோரின் குட்டிக்  கதைகள் தனித்தனியாக படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருப்பதுதான் குட்டி ஸ்டோரி.

குட்டிகளை பற்றிய கதை இல்லை என்பதை கவனித்துக் கொள்க.

இந்த கதை தொகுப்பில் முதலாவதாக பார்வைக்கு  வருவது கவுதம் வாசுதேவ மேனன் ,அமலாபால் ,வினோத் கிருஷ்ணன் ,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய படம்தான்.

கவுதம் மேனனின் ‘டேஸ்ட் ‘ என்னவென்பது தமிழக ஆடியன்ஸுக்கு நன்றாகவே தெரியும். ! அந்த சிறப்பு மிகுந்த ‘ருசி’யை வசனங்கள் வழியாக காட்டியிருக்கிறார்.

நாவலாசிரியரை குறுங்கதை எழுதச் சொன்னால் எப்படி இருக்கும்? பாலகுமாரனின் எழுத்துகளில் இருக்கிற வீரியத்தைப்போல இதிலும் ‘பிளட் டானிக் ‘ இருக்கிறது. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுத்  தெரிந்து கொள்ளுங்கள்.!!

ஆனாலும் ஜுனியர் அமலாபாலுக்கு   ஜுனியர் மேனனாக வருகிற வினோத் கிருஷ்ணன் கிஸ் கொடுக்கும்   காட்சியில் நாம் எதிர்பார்த்தது வேற.. …! துப்பட்டாவினால் கண்களை கட்டிவிட்டு கன்னத்திலா முத்தம் கொடுப்பார்கள்? உதடுகளில் கொடுத்தால் மறுக்கவா போகிறார் அமலா பால் ? போங்க மேனன் சார் ஏமாத்திட்டிங்க!.!

பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் மாதிரி இல்லை கவுதம் மேனனின் எதிர்பாராத முத்தம்.!

அடுத்து பார்த்தது விஜய்யின் இயக்கத்தில் உருவான படம்.

அமிதேஷ் ,  மேகா ஆகாஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

நாட்டில் நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறார் விஜய்.

கல்யாணத்துக்கு முன்னாடியே காமத்தின் ருசியை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்கிறது. அதற்கான காரணத்தின் ஆணி வேரை ஆராயாமல் இளமை ததும்பும் காட்சிகளோடு கதை பயணிக்கிறது. கதை சொன்ன பாணி பிடித்திருக்கிறது.

அழகாக நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ் .நாயகனை விட   நாயகியின் கேரக்டரில்தான் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.அவர்தான் சுமைதாங்கி.!

என்னமோ தெரியவில்லை. சட்டென கதை  முடிந்து விட்ட உணர்வு.!

மூன்றாவது தொகுப்புதான் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வருண்,சங்கீதா ,சாக்சி அகர்வால் .லுத்புதீன் நடித்திருக்கிற குறும் படம்.

இக்காலத்திய இளைஞர்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிற வீடியோ கேம்ஸ் பற்றிய விழிப்புணர்வு படம்.

பெரும்பாலும் கிராபிக்ஸ்தான். ஆதாம் ,ஏவாள் ,மாயா ஆகிய மூன்று கேரக்டர்களை வைத்துக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார் .குறும்படம் என்பது துணிச்சலுடன் தனது கருத்தினை பதிவு செய்யக்கூடிய களம் தான்.கம்பியூட்டர் விளையாட்டை கையில் எடுத்த இயக்குநர் அரதப்பழசான புற்று நோய் சென்டிமென்ட்டை  தொட தேவையில்லை.

ஏமாற்றம் !

கடைசியில் வருகிற நலன் குமாரசாமியின் படம்தான் முதல் பரிசை தட்டிச்செல்கிறது. காதலும் கடந்து போகும் ,சூது கவ்வும் ஆகிய படங்களை தந்த இந்த இயக்குநர் கணவன்,மனைவி ஆகிய இரண்டு கேரக்டர்களை வைத்துக்கொண்டு விளையாடி இருக்கிறார்.

விஜயசேதுபதி-அதிதிபாலன் இருவரும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை நடிப்பில் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கு இருக்கிற திமிர் அதாவது கல்யாணமாகியும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிற கொழுப்பு பெண்ணுக்கும் இருந்தால்?

இதுதான் சப்ஜெக்ட்.

போன் கால் வழியாக விஜய்சேதுபதியின் கள்ளத்தொடர்பை கண்டுபிடிக்கிற அதிதி பாலன்  “இந்த தப்பை நானும் பண்ணினவதான்யா நானும் “என்று சொல்லி விஜய்சேதுபதியை சுற்றலில் விடுகிற காட்சியில் இருவருமே சிக்ஸர் அடிக்கிறார்கள். கடந்து வந்த மூன்று குறும் படங்களை காட்டிலும் இந்தப்படம் நிறைவைத்த தருகிறது.

இது என் ஏரியா உள்ளே வராதே என்கிற அளவுக்கு விஜய்சேதுபதியின் பெர்பாமன்ஸ் இருக்கிறது.

 ஆண் , பெண் இருவரும் எவ்வித மனப்பான்மையில் இருந்துவருகிறார்கள்  என்பதை ஒரு குறும்படத்தில் இவ்வளவு அழுத்தமாக சொன்ன நலன் குமாரசாமிக்கு பாராட்டுகளை சொல்லிவிடுங்கள்.!

 

 

 

 

Tags: அதிதி பாலன்அமிதேஷ் வருண் சங்கீதாகவுதம் மேனன்குட்டி ஸ்டோரிநலன் குமாரசாமிமேகா ஆகாஷ்விஜய்விஜய்சேதுபதிவெங்கட்பிரபு.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?