பிரபுவுடன் இணைந்த சின்னத்திரை பிரபலம்!

சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம்  பிரபலமானநடிகர் முகேன்ராவ் ,   அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து கதாநாயகனாக   நடிக்கும் பட வாய்ப்பும் தேடி வந்தது.வெற்றி  என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வருடம் வெளியானது.இப்படத்தை அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தில் முகேன் ராவிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். இந்நிலையில்,தனது இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பை முகேன் தற்போது வெளியிட்டுள்ளார். வேலன் என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில்கென்னடி கிளப்   மீனாட்சி கோவிந்தராஜன்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  கவின் மூர்த்தி கே இயக்கத்தில் உருவாகி வரும்  இப் படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.