பிரபல நடிகையின் அம்மா மீண்டும் தாயானார் !

நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில திரைப் படங்களிலும்,தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளவர் நடிகை நேஹா மேனன்.சமூக வலைத்தளங்களால் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நேஹா, கடந்த சில வாரங்களுக்கு முன், தனது குடும்பத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் நல்ல செய்தி ஓன்று நடக்க உள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அந்த செய்தியை வெளியிட போவதாகவும் நேஹா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.நெட்டிசன்கள் பலரும் அவரின் திருமண செய்தியை வெளியிட உள்ளார் என கூறி வந்தனர்.

இந்நிலையில்,நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் , தனது அம்மா கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தையை பெற்று உள்ளதாக தாகவும், மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருப்பதாகவும்,என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன். அந்த குழந்தையை வளர்க்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நேஹா,கடந்த 2002 ம் ஆண்டு பிறந்தார். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு அவரது அம்மா மீண்டும் இன்னொரு பெண்குழந்தைக்கு தாயாகி உள்ளார்.இது குறித்து சமூக வலைதளங்களில் ‘டிரோல்’ செய்யப்பட்டு வரும் நிலையில், அது போன்ற அர்த்தமற்ற குப்பைகளுக்கு பதிலளித்து , நல்ல மகிழ்ச்சியான தருணத்தை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.