இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விஜயுடன் நடிப்பது குறித்தும் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடிகை பூஜா ஹெக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”சூப்பர் டூப்பர் சந்தோஷத்தில் இருக்கிறேன்.. மீண்டும் தமிழ் சினிமாவில் இம்முறை தளபதியின் ஜோடியாக வருகிறேன் என பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை வாரிக்குவித்து வருகிறார்.