“இப்படி மறைக்கிறியேம்மா? ” கிரிக்கெட் வீரருடன் பழகியதை மறைக்கும் நடிகை. !

தண்ணீருக்கடியில் இருந்து மூச்சு விட்டால் அது நீர்க்குமுழியாக வெளியில் வரத்தானே செய்யும்?
இது தெரியாதா நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ?
இவரும் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷாப் பந்துடன் நெருங்கிப்பழகியது ஊருக்கே தெரியும். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் என்பதும் செய்திகளாக ஊடகங்களில் உலா போனது.
சரி அதுக்கு இப்ப என்ன என்று கேட்கிறீர்களா?
ஊர்வசி தனது இன்ஸ்டராகிராம் வழியாக அவரது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். ஒரு ரசிகர் “உங்களது அபிமான கிரிக்கெட் வீரர் யார்?” என்று ஒரு ரசிகர் கேட்டுவிட்டார்.
அதற்கு இந்த பொண்ணு என்ன பதில் சொல்லியிருக்கு தெரியுமா?
“நான் கிரிக்கெட்டே பார்க்கறதில்ல. ( அட ங்கொய்யால !) அதனால எனக்கு எந்த கிரிக்கெட் வீரரையும் தெரியாது. சச்சின் ,விராட் இவங்க மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.” என்பதாக ஊர்வசி ரவுத்தேலா சொல்லியிருக்கிறார்.
நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா ,ஊர்வசியும் ,ரிஷாப்பும் இருக்கிற படத்தை போட்டு செம கலாய்.!