கைதி படத்துக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ‘சுல்தான்’ஒன்று.
கார்த்தி,டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு என்கிறபோது எதிர்பார்ப்பு இல்லாமல் போகுமா?
அதுவும் இந்த படத்தில் எக்கச்சக்கமான கேரக்டர்ஸ், கார்த்தியின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். குணசித்திர நடிகரான லால், மற்றும் நெப்போலியன் ஆகியோருக்கு முக்கியமான வேலை என்கிறபோது பிரமாண்டமான தயாரிப்பாகத்தானே இருக்க முடியும்.?
கார்த்தி -லால்,-நெப்போலியன் -ராஷ்மிகா இவர்களை இயக்கும் வாய்ப்பு பாக்கியராஜ் கண்ணனுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?
மக்களின் தீர்ப்பு தியேட்டர்களில் தெரியும்!
கதை என்ன ?
மகாபாரதம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.?நினைவாற்றல் உள்ளவர்களாக அவர்கள் இருந்தால்.!?
கவுரவர்கள் நூறு பேரை நல்லவர்களாக மாற்ற அந்த கண்ணனால் முடியவில்லை. இந்த பாக்கியராஜ் கண்ணன் முயற்சித்திருக்கிறார்.
சென்னையை கலங்கடிக்கும் கிரிமினல்களுக்கு ராஜா நெப்போலியன். இவரது அடியாட்களாக இருப்பவர்களுக்கு ராஜயோகம். எல்லா வசதிகளும் இலவசம் என்கிறமாதிரி செய்து கொடுக்கிறார். அவர்களும் ஏற்றுக்கொண்டு பரம விசுவாசிகளாக இருக்கிறார்கள். இவர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பெராடி நெப்போலியனையும் சிலரையும் போட்டுத்தள்ளிவிடுகிறார். மற்றவர்களையும் போட்டுத்தள்ள என்கவுண்டர் லிஸ்ட் தயார்!
இதை தவிர்ப்பதற்காக நெப்போலியனின் மகனான கார்த்தி எத்தகைய வழிகளை கையாளுகிறார்,அதற்கு அப்பா நெப்ஸ் செய்து கொடுத்திருந்த சத்தியம் எப்படி உதவுகிறது என்பதுதான் கதை.!
கேஜிஎப் வில்லனான நவாப் ஷாவை வைத்து மிரட்டப் பார்த்திருக்கிறார் .தமிழ்நாட்டிலேயே பல ஆட்கள் இருக்கிறபோது கேஜிஎப்பில் போய் தேடி இருக்க வேண்டுமா?
இந்தப்படம் கார்த்தியின் ஒன் மேன் ஷோ.! மொத்த சுமையையும் அந்த மனிதர்தான் தாங்கியிருக்கிறார் .பொன்னியின் செல்வன் அல்லவா ,வலிமையான தோள்கள்.!அந்த மிட் நைட் ஃபைட் செம.பிரில்லியண்ட் என்பதை விட எக்ஸலண்ட் ! சத்யன் சூர்யன் கேமராவுக்கு செம கிளாப்ஸ்.! கார்த்தியின் ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்திருக்கிறார்கள்.
பொன்வண்ணன்,ஹரிஷ் பெராடி, சதீஷ் ,யோகிபாபு ,சிங்கம் புலி ,மாரிமுத்து ,மயில்சாமி ,இவர்களையெல்லாம் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் சரியாக பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை தயாரிப்பாளர்கள் கவனிக்கவில்லை , போலும்.!,
சுல்தான் எப்படி?
பாக்கியராஜ் கண்ணன்தான் பொறுப்பு !