சமீபத்தில் ராதாரவி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நயன்தாரா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? என்றும், உதயநிதிக்கும் அவருக்கும் என்ன உறவு என்றும் கேள்வி எழுப்பி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பின்னணிப்பாடகி சின்மயி தனது டுவிட்டரில் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது,‘இந்த மனிதராலும் இவருடைய பேச்சாலும் நான் உண்மையிலேயே ரொம்ப ‘டயர்ட்’ ஆகிட்டேன்.
என்னால் இதற்கு மேல் முடியவில்லை. வெளிப்படையாகவே இவர் ஆபாசமாக பேசுகிறார். இவரை எப்படி அந்த கட்சி நட்சத்திர பேச்சாளராக எடுத்தது என்பது தெரியவில்லை.திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், பாஜகவின் ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவு செய்துள்ளார். இவரது டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.