மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இன்று மாலை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 21ம் தேதிதிடீர் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின், சில நாட்களில் வீடு திரும்பினார்.டாக்டர்கள் அவரை வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால்,டாக்டர்களின் எச்சரிக்கையை மீறி அ திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் போன்ற தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.
பிரச்சாரத்திற்கு பின் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு இன்று மாலை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கார்த்திக் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா தோற்று பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது மருத்துவர்கள் அவரை குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.