ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மும்முரமாக நடந்து வந்த அண்ணாத்த படத்தின்படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டபடப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி மீண்டும் ஐதராபாத்தில் நடத்த்து வருகிறது.
இப் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடிக்கும் பணியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த முறை மாதிரி எதுவும் இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக பின்பற்றப்படுகிறது.அதோடு படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் அரங்கில் செல் போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
இப்படத்தில் தற்போது ’சுல்தான்’ அர்ஜய் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாதொற்றின் இரண்டாவது அலை தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இதன்காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஐதராபாத்தில் இரவு நேர ஊரடங்குஅமலில் உள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் சில இரவு நேர காட்சிகளை படமாக்கப்பட வேண்டியுள்ளதால் அண்ணாத்த படக்குழு இரவு நேர படப்பிடிப்புக்காக தெலுங்கானா அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.