நாளை முதல் திரையரங்குகள் மீண்டும் மூடல்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 26) முதல் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கிற்கு பிறகு, கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன.தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் , தனுஷ் நடித்த கர்ணன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மக்கள் கூட்டமும் ஓரளவுக்கு திரையரங்குகளை நிரப்பியது.

இந்நிலையில் கொரோனா 2வது அலை தற்போது மிக வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளுக்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந்தது.கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 26) முதல் திரையரங்குகளை   மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கங்கனா ரணாவத் நடித்த தலைவி, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய்சேதுபதியின் லாபம் என பல படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியிட படுவதற்காக ரிலீஸ் செய்யப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்ட படங்களின் நிலை தற்போது, தியேட்டர்களை மீண்டும் மூட உத்தரவிட்டுள்ளதால் கேள்விக்குறியாகி உள்ளது.