கொரோனா 2 வது அலையின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் தலைவிரித்து ஆடி வருகிறது பல இ டங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோன நோயாளிகளுக்காக அவர்களது உறவினர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக கதறும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி நம்மை நடுநடுங்க வைக்கிறது.சரி,இனி விசயத்துக்கு வருவோம்,
அரசியல், சினிமா என எதுவாக இருந்தாலும் நடக்கும் சமூக அநீதி செயல்பாடுகளை துணிச்சலுடன் தனது கருத்துக்களை தனது ட்விட்டரில் பதிவிட்டு சம்பந்தப்பட்டவர்களை தெறிக்க விடுபவர் நடிகர் சித்தார்த்.
இந்நிலையில், “ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை. அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவை வதந்தியை பரப்புவதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். என்றும், மருத்துவமனைகள் ஏதாவது ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று தவறான கோரிக்கையை முன்வைத்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ” என எச்சரிக்கை விடுத்து இருந்தார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இதற்கு பிரியங்கா காந்தி, “ஆமாம், உபியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது தான். நான் இப்படி சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு தொடர்ந்து எனது சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் என்று கடும் காட்டத்துடன் பதில் கூறியிருந்தார்.இந்நிலையில் தான் நடிகர் சித்தார்த், மகா துணிச்சலுடன்
“பொய் சொல்வது சாமனிய மனிதரோ, ஆன்மிக குருமாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை சந்திக்க வேண்டிவரும்” என்று தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சித்தார்த்தின் இப்பதிவு இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
Any false claims of being a decent human being or a holy man or a leader will face one tight slap. https://t.co/3ORv22zVCV
— Siddharth (@Actor_Siddharth) April 27, 2021