விக்ரம் திரைக்கதை…திருத்தம் சொன்ன கமல் !

மாநகரம்’ ’கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக  கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’  படத்தை இயக்க உள்ளார்.அனிருத் இசையமைத்து வரும்  இப்  படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாத மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா 2 வது அலை தாக்கம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். மேலும்    லோகேஷ் கனகராஜ் எழுதிய  ‘விக்ரம்’ படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன் அதில் ஒரு சில  மாறுதல்களை செய்யும் படி கூற, அதன்படியே லோகேஷ் கனகராஜூம்   திரைக்கதையில் மாற்றங்களை செய்து வருகிறார் என்கிறார்கள்.பக்கா ஆக்சன் கமர்சியலக உருவாகும்  இப்படம் கமலுக்கு இன்னொரு அபூர்வ சகோதரர்கள் படமாக அமையும் என்கிறது படக்குழு. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பகத் பாசில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.