தொற்று தடுப்பு ஸ்பெஷல் ஆபிசர் சித்திக்.
இவர் சென்னையில் நிலவுகிற கொரானா நிலவரம் பற்றி பத்திரிகையாளர்களிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“சென்னையில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மக்கள் கூட்டமாக கூடக் கூடாது.மக்களின் ஒத்துழைப்பு அவசியம் .தற்போது ஆவடி ,அண்ணா நகர் ,அம்பத்தூர் ,எழும்பூர் ,கிண்டி என எல்லா மண்டலங்களிலும் கொரானா பயங்கரமாக இருக்கிறது. சுனாமி மாதிரி பரவுகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . ஆக்சிசன் பற்றாக்குறை என்பது இல்லை. எல்லாமே விரைவில் சீரடைந்து விடும். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் “என்பதாக சொல்லியிருக்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 4764 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்பதாக சொல்லியிருக்கிறார்.