இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் ஒரு இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் உள்ளார்.
தற்போது தணிக்கைக் குழு உறுப்பினராகவும், பா.ஜ.க. கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்..இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை( வயது 69) . உடல்நல பிரச்சனை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 :30 மணியளவில் உயிரிழந்தார்.இவரது மகன்கள் வெங்கட் பிரபு, நடிகர் மற்றும் இயக்குனராகவும், இளையமகன் பிரேம் ஜி அமரன் இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் உள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.