இந்தியாவில் தற்போது கொரோனா 2 வது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில்,தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,திரையரங்கு
இதனால் மீண்டும் படதயாரிப்பாளர்கள் அனைவரும் ஓடிடி தளங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். இந்நிலையில்,திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மற்றும் விஜய்சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியிட ஒப்பந்தமானதாகவும், ஓடிடி உரிமையோடு சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து முன்னணி ஓடிடி நிறுவனம் ‘டீல்’ பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமை பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்கப்பட்டு விட்டதால்,விற்றது விற்றது தான் திரும்பியெல்லாம் தரமுடியாது. என அந்நிறுவனம் தனது சாட்டிலைட் உரிமையை திருப்பி கொடுக்க மறுத்து விட்டதாம். இதனால்,தற்போது இப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இப்படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.