அஜித்தின் நடிப்பில் வீரம், வேதாளம்,விவேகம்,விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு ஹிட் படங்களை இயக்கி, நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தா இயக்குனர் சிறுத்தை சிவா,தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார்.
கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு,இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் இப் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக நடித்து வரும் வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தனது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ள ரஜினிகாந்த், மீண்டும் சென்னை திரும்பியதும் அடுத்து 2 புதிய படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு படத்தை மீண்டும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது