கொரோனா நிதி: ரஜினி மகள் ரூ. 1.கோடி, அஜித் ரூ.25 லட்சம் வழங்கினர்!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில்,. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அவரது வேண்டுகோளை ஏற்று முதலாவது ஆளாக நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  மகள்  சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது மாமனார் நிறுவனம் (apex  laboratory) சார்பில்  கொரோனா நிவாரண நிதியாக,முதல்வர் நிவாரணநிதிக்கு  இன்று காலை  ரூ.1 கோடி வழங்கினார் இதையடுத்து, நடிகர் அஜித் குமார் தனது கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.