அம்மாவுக்கே தாயாக மாறிய நடிகர்! வைரலாகும் புகைப்படம்!!
அலிபாபா, யாமிருக்கபயமே, கழுகு ,வானவராயன் வல்லவராயன்,கழுகு2 உள்ளிட்ட படங்களின் நாயகன் ,கிருஷ்ணா. தற்போது,ராயர் பரம்பரை பெல் பாட்டம், கிரகணம்,உள்ளிட் ட சில படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள், படப்பிடிப்புகள் என அனைத்தும் முடங்கியுள்ளதால் பலரும் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில்,நடிகர் கிருஷ்ணா தனது அம்மாவுக்கு தானே சிகையலங்கார நிபுணராக மாறி முடி வெட்டி விடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, ‘அம்மாவுக்கு தாயாக நான் மாறி முடி வெட்டிய தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகர் கிருஷ்ணாவை பாராட்டி வருகின்றனர்.