திரைக்கு வர காத்திருக்கும் ’50’ சிறு முதலீட்டுப் படங்கள்!

Logan, Priyadharshini in Kagitha Pookal Movie Stills

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை  தனுசின்” கர்ணன் ”  கார்த்தியின் ” சுல்தான் ” பெரிய

படங்கள் உட்பட சிறு முதலீட்டுப் படங்கள் திரைக்கு வந்து கொண்டிருந்தன.கொரோனா உச்சத்தை தொட ஆரம்பித்த உடன் படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது.
காகித பூக்கள்,  உழைக்கும் கரங்கள்,  சினிமா கனவுகள், இளஞ்ஜோடிகள், இது கதை அல்ல நிஜம், வீரமகன், இளவரசி, வைரி, சில்லாட்ட, பூதமங்கலம் போஸ்ட் , டம்மி ஜோக்கர், பிரம்மபுரி, வாழ்க ஜனநாயகம், இரவா இரவு ,  உத்ரா, கபாலி டாக்கீஸ், எல்லைக்காவலன், பிறர்தர வாரா, சின்ன பண்ணை பெரிய பண்ணை, நெஞ்சாக்கூட்டில், வெற்றித்திருமகன்,
ஆகிய படங்கள் உட்பட 50 படங்கள் திரைஅரங்குகள் திறக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
கொரோனா காலம் முடிந்த உடன் படங்களை ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள்., வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூடிப்பேசினால் இதற்கு உடனடி தீர்வு ஏற்பட்டு சிறு படத்தயாரிப்பாளர்கள் மற்றும்  திரையரங்கு உரிமையாளர்கள் இழப்புகளை ஓரளவுக்காவது  ஈடு செய்ய முடியும் என்கிறது சிறுபடத் தயாரிப்பார்கள் தரப்பு