கொரோனா நிவாரண பணிகள், வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் ஆய்வுகள், முகாம்களை பார்வையிடுதல் என தினம்தோறும் ஒவ்வொரு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.. குப்பை கூலங்கள் நிறைந்த பகுதியானாலும்சரி, சாக்கடைகள் தேங்கி கிடக்கும் தெருக்களானாலும் சரி, சங்கோஜமின்றி நடந்து சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து, உடனடியாக அவைகளை சீர்செய்ய உத்தரவிட்டு வருகிறார் நடிகரும், எம்எல்ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் . சமீபத்தில்,தனது சேப்பாக்கம் தொகுதியின் அம்மா உணவகத்துக்குள் திடீரென உள்ளே நுழைந்த உதயநிதி ஸ்டாலின் ,ஒரு ஸ்பூனை எடுத்த அம்மா உணவக உணவை சாப்பிட்டு , அதன் தரத்தை ஆய்வு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த செய்தியை தம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி, “கற்பனையில் கூட நம்பியிருக்க மாட்டேன், நடக்கிறது . கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தந்தையும் மகனும் எடுத்துக்காட்டாய் செயல்படுகிறார்கள். வாழ்த்த சந்தோஷமாக இருக்கிறது. ” என பதிவிட்டுள்ளார்.இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.