நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு வருடமும் அவர் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியாத நிலை உருவானது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசின் சிறப்பு அனுமதியின் பேரில் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.அதன்படி,
சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றார். அங்கு ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக் மருத்துவமனையில் ரஜினிகாந்த்துக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
தனது சிகிச்சை குறித்து கவிஞர் வைமுத்துவிடம் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தொலைபேசியில் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில்,ரஜினிக்