“அதிரடியான மாற்றம் என்றதும் ‘பக்’கென ஆகிவிட்டது.
இந்த சமந்தா பொண்ணு சித்தார்த்தை மாத்துன மாதிரி பண்ணிப்பிடிச்சான்னு நமக்கு ஜெர்க் ஆகிடுச்சு .!
எதையும் உறுதியா சொல்ல முடியலேண்ணே ..நாட்டு நடப்பு அந்த மாதிரி ஆகிப்போச்சு. அக்கினேனி குடும்பத்து மருமகளாக மாறின பிறகு குடும்ப கவுரவம் பாதிக்கப்படாது என்பதில் கணவர் நாகார்ஜுனாவைவிட மனைவி அமலா மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகிறார் என்கிறார்கள் .
திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை சமந்தா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிடுவது, ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி புரமோட் செய்வது என இருப்பார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என தனது கணவரின் குடும்ப பெயரை திருமணத்திற்கு பின் பதிவு செய்திருந்தார். இந்நிலையில்,தற்போது திடீரென ‘சமந்தா அக்கினேனி’ என்ற பெயரை மாற்றி ‘S’ என்று மட்டும் பதிவு செய்துள்ளார்.
அவரின் திடீர் பெயர் மாற்றம் ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,. சில நெட்டிசன்கள்,கணவருடன் கருத்துமோதலா என்றும், குடும்பத்துல யாராவது குண்டு வச்சுட்டாங்களா?
இன்னும் இதைவிட வேறுவிதமாகவெல்லாம் கேட்கிறார்கள்.