உலகநாயகனின் மூத்த வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன் தனது முதல் காதல் முறிவுக்கு பின் கடந்த சில மாதங்களாக ‘டூடுல்’ ஓவியக் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பதும், இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஓன்று தான்.
ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது காதலர் சாந்தனுவுடனான நெருக்கமான ‘செல்பி’ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். இப்புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் ‘ஓவிய’ காதலர் சாந்தனு எழுதி பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்ருதிஹாசனின் காதலருக்கு எழுதி பழக வேறு இடம் கிடைக்கவில்லையா? அவருடைய வயிறு தான் கிடைத்ததா? என ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
#ShrutiHaasan boyfriend art 🎨🎭 #shrutihassan #Shruthihaasan #shruti pic.twitter.com/pNud1C6Llq
— ActressExclusively (@ActressExclusi1) July 29, 2021