“டைவர்ஸ் என்பது அசிங்கமான சொல். இது என்னுடைய இரண்டாவது டைவர்ஸ். ஆகவே டைவர்ஸ் என்பதை சொல்ல விரும்பவில்லை. ஷிகர் தவானுடன் 8 வருஷம் வாழ்ந்தாச்சு. ஒரு பையனும் இருக்கிறான்.நான் அந்த கிரிக்கெட் வீரருடன் வாழ விரும்பல .பிரிஞ்சிட்டேன்” என்று ஓரே போடாக போட்டிருக்கிறார் ஆயிஷா முகர்ஜி. இவர் ஒரு கிக் பாக்ஸர்.!
மெல்போர்ன் வாசி ஆயிஷா .ஆஸ்திரேலிய வணிகரை கல்யாணம் செய்து கொண்டு அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளை பெற்றுக் கொடுத்தார். அந்த வணிகருடனும் வாழ்க்கை முழுமை பெற வில்லை என்பதால் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை மணந்து கொண்டு ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார்.
“வேடிக்கையை பாருங்களேன். முதல் கல்யாணத்தில் டைவர்சி என்பது சரி.அதையே ரெண்டாம் கல்யாணத்திலும் சொல்வதென்றால் ..ஸ்ஸ் ..அந்த வார்த்தையே அசிங்கம்பா !”என்கிற இவரது அடுத்த ரவுண்டுக்கு சிக்கப்போகிறவர் யாரோ?
எங்கே தப்பு நடந்திருக்கிறது குத்து சண்டையிலா ,பந்து அடிப்பதிலா?