நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சனா ஷெட்டி, தீபக், சிவரஞ்சனி, முனீஷ்காந்த்.
இயக்குனர் : சமுத்திரக்கனி
இசை :சி .சத்யா
தயாரிப்பு : அபிராமி ராமநாதன்
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்க, சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் படம், ‘விநோதய சித்தம்’. ‘அபிராமி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இந்தபடம், ‘ஜீ 5’ ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் தனிமனித வாழ்க்கையின் ஒழுக்கத்தைப் பற்றி அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்தவருடையதை அபகரித்து தனதாக்கி கொள்ளாதே.. அதை விட பெரிதான ஒன்று உனக்கு காத்திருக்கிறது. சரியாக நாம் நடந்து கொண்டால், நம்மைச் சுற்றி எல்லாமே சரியாக நடக்கும். நடக்கும்., எல்லா விஷயங்களுமே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மரணத்திற்கு பிறகு எனது குடும்பம் எப்படி நடக்குமோ.. என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தெளிவை கொடுப்பது தான் ‘விநோதய சித்தம்’ படத்தின் கதை.
எல்லா படங்களிலும் புரட்சி பேசும் சமுத்திரக்கனி இந்தப்படம் முழுவதும் தத்துவம் பேசுகிறார். எல்லோருமே ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவங்கள் அமைதியாக நடித்திருக்கிறார்.அந்த மென்மையிலும் ,மேன்மை இருக்கிறது.சில இடங்களில் பின் கொண்டு குத்துவது போல கச்சிதமான சுட்டிக்காட்டல்.
தம்பிராமையாவும் தனது வழக்கமான நடிப்பின் மூலம் நம்மை கவர்ந்து விடுகிறார். உயர்பதவி கிடைத்தவுடன் அவர் நடந்து கொள்ளும் ‘பதவி பவுசு’ அடடே.. அபாரமான நடிப்பு.
இவருடன் படத்தில் நடித்த முனீஷ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, தீபக், சிவரஞ்சனி, ஜெயப்பிரகாஷ் என அனைவரும் பாராட்டும்படியே நடித்துள்ளனர். இயல்பாக என்.கே.ஏகாம்பரத்தின் இயல்பான ஒளிப்பதிவும்,.சத்யாவின் இசையும் காட்சிகளை மேம்படுத்துகிறது.
ஸ்ரீவத்சனின் கதைக்கு, சரியான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், சமுத்திரக்கனி.
பார்க்க வேண்டிய படம் தான், விநோதய சித்தம்.