தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என பெயரெடுத்துள்ள இயக்குநர், நடிகர் கே பாக்யராஜ் திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முக கலைஞராக 75 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் . 25 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இன்றளவும் தன்னை தொடர்ந்து நடிகராகவே அடையாளப்படுத்தி வருகிறார், இவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்த முந்தானை முடிச்சு 2 ம் பாகத்திலும் தனது திறமையை நிரூபிக்க தயாராகி வருகிறார்,
, கே.பாக்யராஜ் பங்கேற்ற ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் அப்புகைப்படங்களில் கோட் சூட் உள்ளிட்ட மிகவும் ஸ்டைலிஷ் ஆன உடை அணிந்து பல்வேறு தோற்றங்களில் காணப்படுகிறார்.