உலகநாயகன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’. படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில்,இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான சில காட்சிகளை படமாக்க, சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கான முன் வேலைகள் நடத்தவும் அனுமதி கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சென்னை காவல் துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இப்படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்து தமிழக காவல் துறை ராஜ்கமல் படநிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அக்கடிதத்தில்,”கொரோனா பரவல் காரணமாக சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியத்தில் எந்தவித படப்பிடிப்புக்கும் அனுமதி இல்லை என விளக்கம் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து ‘விக்ரம்’ படக்குழு திட்டமிட்ட இடத்துக்கு பதிலாக வேறொரு இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதக்க தகவல் வெளியாகியுள்ளது.