ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட போதே ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்த கமல்ஹாசன்.இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார்த்தையாகவே ரஜினிகாந்தை பாராட்டி உலகநாயகன் பேசியது அனைவரது பாராட்டுக்களையும் ஒட்டுமொத்தமாக பெற்றுள்ளது.
சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் மற்றும் ரஜினிகாந்த் என எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாதா சாகேப் பால்கே விருதை பெற்று வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சி என கமல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பேச அரங்கமே ஆர்ப்பரித்து விசிலடித்து கைதட்டி அதிர செய்தது.
நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது எனக்கே கிடைத்த விருது போல நினைத்து மகிழ்கிறேன் என கமல்ஹாசன் பரந்த மனதுடன் ரஜினிகாந்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாராட்டி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.