ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு மற்றும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.இப்படி விசா பெறும் பிரபலங்கள் 10 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் குடிமகன்களாகவே கருதப்படுவர்.
திரையுலகை பொறுத்தவரை பாலிவுட் சினிமாவில் சஞ்சய் தத், ஷாருக்கான், போனி கபூர், அர்ஜுன் கபூர் மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், பிருத்விராஜ் சுகுமாரன் எனப் பலரும் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தேலாவிற்கும், நடிகை மீரா ஜாஸ்மினுக்கு இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது.
தற்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து வரும் வரும் நடிகை திரிஷா கோல்டன் விசாவை பெற்றுள்ளார். இதுகுறித்து, “அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்“ என்று நடிகை திரிஷா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram












