விஜய்சேதுபதி மீது தாக்குதல்: உண்மையில் பெங்களூருவில் நடந்தது என்ன?
நடிகர் விஜய்சேதுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்றிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறையினர் அளித்துள்ள விளக்கத்தில், பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணை செய்ததாகவும்,போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்த அந்த இளைஞர் கேரளாவை சேர்ந்த ஜான்சன் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விஜய்சேதுபதியின் உதவியாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும், தங்களுக்குள் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதாக எழுதி கொடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அதேபோல் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபரும் எழுதி கொடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து இரு தரப்பும் சமாதானமாக சென்று விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும்,விஜய்சேதுபதியுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது அந்த நபர் குடிபோதையில் இருந்ததால் அவரது உதவியாளர் விஜய் சேதுபதி பக்கத்தில் செல்ல அனுமதிக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் விஜய்சேதுபதியின் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பிரச்சனையை பேசி சமாதானம் செய்து வைத்ததால் இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.