‘எனிமி’ விமர்சனம்.
‘எனிமி’ விமர்சனம்.
இயக்குநர் ஆனந்த் சங்கர்
நடிகர்கள்:விஷால் ஆர்யா,தம்பிராமையா, மிர்னாளினி ரவி,மம்தா மோகன் தாஸ்,பிரகாஷ் ராஜ் …ஒளிப்பதிவு; ஆர்.டி ராஜசேகர்.இசை; தமன்.ரேட்டிங் 3/5
ஊட்டியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகன்(சோழன்) விஷால், இவரது பக்கத்து வீட்டுக்காரர் முன்னாள் சிபிஐ அதிகாரி பிரகாஷ் ராஜின் மகன் (ராஜீவ்)ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். பிரகாஷ் ராஜ் முன்னாள் சிபிஐ அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் புலனாய்வு, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியளிக்கிறார்..
இந்நிலையில், திடீரென பிரகாஷ் ராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.இதையடுத்து தம்பிராமையா தன் மகன் விஷாலை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் சென்று விடுகிறார்.
இதன்காரணமாக நண்பர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.வ்ருடங்கள் உருண்டோட விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில்,இந்திய வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் சிங்கப்பூருக்கு வர, அவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை கண்டுபிடித்து விஷால் தடுக்கிறார்.அப்போது கொலை முயற்சியில் ஈடுபட்டது தன் இளவயது நண்பன் ஆர்யா என தெரிய வருகிறது.
இதையடுத்து என்ன நடக்கிறது ஆர்யா அமைச்சரை கொல்ல முயன்றது ஏன்? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜை கொன்றது யார் என்பதே கிரைம் திரில்லர் பாணியில் படமாக்கப்பட்ட படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
நிஜ வாழ்க்கையில் நெருக்கமான நண்பர்களாக வலம்வரும் விஷால், ஆர்யா இருவரும் அவன் இவன் படத்துக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரசிக்கலாம்.இருவரது சண்டைக்காட்சிகளும் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன.படம் முழுவதும் வரும் இருவருக்குமான காட்சிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
விஷால்-ஆர்யா இருவரின் துப்பறியும் காட்சிகள் படத்துக்கு வேகம் சேர்க்கிறது. இயக்குனர் ஆனந்த் சங்கர். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்.மிர்ணாளினி ரவி மம்தா மோகன்தாஸ் இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.தம்பி ராமையாவின் ‘ரிஸ்க்’ ராமலிங்கம் மனதில் பதிகிறது..
இசையமைப்பாளர் தமன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ‘டம் டம்’ பாடல் கேட்கும் ரகம். .சாம்.சி.எஸ் ஸின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவை அப்படியே அசத்தலாக ‘செட்’போட்டுள்ளார் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பாராட்டப்படவேண்டியவர்.. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரமாதம். படத் தொகுப்பாளர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். .மொத்தத்தில் ‘லாஜிக் இல்லா மேஜிக்’ எனிமி ! பார்க்கலாம்