சூர்யாவின் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்திற்கு சூர்யா எழுதிய பதில் கடிதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில், ஜெய்பீம் சமூக அநீதிகளை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சொல்லியிருக்கிறது என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பாராட்டி உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நடிகர்ஜெயிப்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சரத்குமார் சூர்யாவுக்கு பாராட்டு கடிதம் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
அதில் அவர் கூறியுள்ளதாவது,” “அன்புள்ள சூர்யாவிற்கு, வணக்கம். ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தேன். நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்தநிலையில், நீதி அரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை, உலகம் மறந்துவிடக் கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த ஒரு தயக்கம் இல்லாமல், வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற ‘ஜெய்பீம்’ சூர்யாவின் உன்னத எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்.
சரித்திரங்கள் மறப்பதற்கு அல்ல அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகறியச் செய்ய வேண்டும் அப்போதுதான் நல்லெண்ணங்கள் நாட்டுப்பற்று சமூக ஒழுக்கம் சமூக நீதி சமத்துவம் நிலைநாட்டப்படும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ராசா கண்ணு வழக்கும் அவரது மரணமும்.
நீதியை நிலைநாட்ட போராடிய ராசாகண்ணுவின் மனைவியும், நீதி தோற்றுவிடக்கூடாது என்று போராடிய சந்துருவை போலவும், பெருமாள்சாமியை போலவும், நாட்டில் பலர் தோன்ற வேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில், ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழி, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு.சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன், ஞானவேலை பாராட்டுகிறேன். ராசாகண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி, மற்றும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்களையும் என் உள்ளத்தின் அடித் தளத்தில் இருந்து போற்றுகிறேன். I am touched Deeply. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்