பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர் என் ஆர் மனோகர் மாரடைப்பால் காலமானார். (வயது 61). மாசிலாமணி வேலூர் மாவட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் மேலும்,விஜயகாந்த், விஜய் சேதுபதி, கள்ளழகர், தில், தென்னவன், சபரி. வீரம், சலீம், கா, என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம், ஆண்டவன் கட்டளை, அச்சம் என்பது மடமையடா,
தீரன் அதிகாரம் ஒன்று, கவன், விஸ்வாசம், காஞ்சனா 3, அயோக்யா, காப்பான், கைதி , பூமி , டெடி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஆர் என் ஆர் மனோகர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். ஆர் என் ஆர் மனோகர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . அவரது மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












