மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘ஹவுஸ் ஆப் கதர்’ என்ற பெயரில் பிரத்யேக ஆடை பிராண்டை உருவாக்கியுள்ளார். காதி ஆடைகளை மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்யும் நோக்கத்தில் அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த நிலையில் அவருக்கு லேசான இருமல் இருந்து வந்தது. இதையடுத்து அவர் கொரோனா தொ ற்று பரிசோதனை செய்து கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக்கொண்டநிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021