விஜய்சேதுபதி,சந்தீப்கிஷனுக்கு வில்லனாக மாறிய கவுதம்மேனன்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முதன்மை வேடத்தில் நடிக்க, ’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு,  கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப் படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.  இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார்.

இதில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன் புரட்சிக்கரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார். ‘மைக்கேல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது.

இது படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ‘மைக்கேல்’ படத்திற்கு வித்தியாசமான திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர்