ராம நடராஜன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில்,ஆர்.நடராஜன் தயாரிக்கும் புதிய படம்,’குண்டாஸ்’ இப்படத்தை செவிலி, மோகனா போன்ற படங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கியுள்ளார்.இதில், கதாநாயகன் நாயகியாக ஷா-அர்ச்சனா கெளதம் நடிக்க மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, கராத்தே ராஜா.பாபூஸ்,ராம நடராஜன், திருவெண்காடு ஆர்.அன்பு மதியழகன், அருள்தாஸ், ஏயம்பட்டி தங்கதுரை, தலைவாசல் இந்திராணி, மகேஸ்வரி, கோகுல பிரசாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ஆர்.ஏ.ஆனந்த். கூறியதாவது,”செய்யாத குற்றத்திற்காக காவல்துறையின் சித்ரவதையும், சிறை தண்டனை கொடுமையையும் தினம் தினம் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படமே “குண்டாஸ்” .
இதில்,கிராமத்து மைனராக மொட்டை ராஜேந்திரன்,ஆயுள் கைதியாக கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு,மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவெண்காடு, திருக்கடையூர், பொறையாறு, தரங்கம்பாடி போன்ற இடங்களில் 35 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.
சந்திரா சத்யராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.அடியாத்தி யாருநீ மனசெல்லாம் பாடுதீ …என்ற மென்மையான ஏகாதேசி எழுதிய பாடலை அந்தோணிதாஸ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் நிறைவு கட்ட பணிகள் நடந்து வருகிறது என்கிறார்.